தில்லையாடி வள்ளியம்மை சிலைக்கு இளங்கோவன் மாலை அணிவிப்பு
First Published : 25 Jan 2012 02:36:47 PM IST
பொறையாறு, ஜன. 24: நாகை மாவட்டம், தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மை சிலைக்கு மத்திய முன்னாள் இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திங்கள்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மயிலாடுதுறைக்கு அவர் திங்கள்கிழமை வந்தார். தொடர்ந்து, திருக்களாச்சேரிக்கு சென்று அண்மையில் மறைந்த காங்கிரஸ் கட்சியின் தொழில்சங்க மாநில தலைவராக இருந்த ஜம்புவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், தில்லையாடிக்கு வந்த இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளராக இருந்து சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த அன்பழகன் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்.
தொடர்ந்து, தில்லையாடியில் உள்ள வள்ளியம்மை நினைவு மண்டபத்தை இளங்கோவன் பார்வையிட்டார். அங்கிருந்த மகாத்மா காந்தி எழுதிய கடிதங்கள், அரிய புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.
அங்குள்ள தியாகி வள்ளியம்மை சிலைக்கும், பொறையாறு அருகே ராஜீவ்புரத்தில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கும் இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்ட பொறுப்பாளர் பூம்புகார் எம். சங்கர்,ஜம்பு. கென்னடி, பூம்புகார் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.எஸ். கார்த்தி, வட்டார பொதுச் செயலர் ஜி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக